பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2024 - ரிஷபம்

பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2024 - ரிஷபம்

புதிய திட்டங்களை வடிவமைத்து செயல்படும் ரிஷப ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் சனி அமர்ந்து களத்திர ஸ்தானத்தை பார்ப்பதும், வெளிநாடு செல்லும் வாய்ப்பையும், குடும்பம் விட்டு பிரிந்து பணி செய்யும் சூழ்நிலையும் உருவாகும். எதையும் முன் கூட்டியே யோசித்து செயல்படும் உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிட்டும். அடிக்கடி செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற அலைச்சல்கள்.. வெளியூர் சென்று வருதல் அமையும். உத்தியோகத்திலும், பணியிலும் சிலருக்கு இடமாற்றம் செய்ய வேண்டி வரும். திறமைகளுக்கு தகுந்த வேலை வாய்ப்புகள் அமையும். கலை துறையினருக்கு எதிர்பார்த்த மேன்மை உண்டாகும். சிறந்த கதை ஆசிரியர்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
06-02-2024 செவ்வாய் அதிகாலை 04.16 முதல் 08-02-2024 வியாழன் காலை 08.42 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:-

கார்த்திகை 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
அரசியலில் செல்வாக்கு பெற்று விளங்குவீர்கள். உங்களின் ஆதரவாளர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்படுவார்கள். பணபுழக்கம் இருக்கும்.
 
ரோகிணி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
சரியான நேரத்தில் இருக்கும் இடத்திலிருந்து எல்லா காரியங்களை செய்து முடிப்பீர்கள். குறுகிய நாட்களில் உங்களின் பணியை செய்து முடிப்பீர்கள்.
 
மிருகசீரிடம் 1, 2 ஆம் பாதங்கள்:
 
காவல், ராணுவ பணியாளர்களில் பதவி உயர்வு பெற்று, வளம் பெறுவீர்கள். குடும்பத்திலிருந்து வந்த அனைத்து பிரச்சனையும் சரியாகும்.

அதிர்ஷ்ட நிறங்கள்:
 
வெண்மை, ஓரஞ்சு, சிவப்பு.

அதிர்ஷ்ட திசைகள்:
 
தெற்கு, வடமேற்கு, கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
வெள்ளி, சனி, ஞாயிறு.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய்கிழமைகளில் சுப்ரமணியரை வழிபட்டு இலுப்பெண்ணெய் தீபமிட்டு, சிவப்பு நிற பூ வைத்து வேண்டிக் கொள்ள, தடைபட்ட சகல காரியமும் வெற்றியைத் தரும்.